குன்னூரில் அதிர்ச்சி: நகராட்சி ஆணையர் குடியிருப்பில் பரவிய தீயால் பதற்றம்!


குன்னூர்: குன்னூர் புளூ ஹில்ஸ் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான ஆணையர் குடியிருப்புப் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் செடி,கொடிகளை வெட்டி சுத்தம் செய்து தீ வைத்தனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குன்னூரில் நிலவும் வறட்சியால், பல இடங்களிலும் தீ பரவி வரும் நிலையில், நகராட்சி ஊழியர்களே செடிகளுக்கு தீ வைத்தது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

x