பிப்.11-ல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் - வள்ளலார் நினைவு தினத்துக்காக வெளியான அறிவிப்பு!


சென்னை: வள்ளலார் நினைவு தினமான பிப்ரவரி 11-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘வள்ளலார் நினைவு தினமான பிப்ரவரி 11-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட வேண்டும்.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக மதுபானத்தை பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வள்ளலார் நினைவு தினமான பிப்ரவரி 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

x