போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி ரூ.4 ஆயிரம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது: அன்புமணி விமர்சனம்


சென்னை: ​போக்கு​வரத்​துக்கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்​கப்​பட்​டுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி தெரி​வித்​துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அரசு போகு​வரத்து கழகங்​களில் பணியாற்றி ஓய்வு​பெற்ற தொழிலா​ளர்​களுக்கு கடந்த 110 மாதங்​களாக அகவிலைப்படி உயர்வு மறுக்​கப்​பட்டு வந்த நிலை​யில், ஜனவரி மாத ஓய்வூ​தி​யத்​துடன் அகவிலைப்படி அதிகபட்​சமாக 27 சதவீதம் உயர்த்தி வழங்​கப்​பட்​டிருக்​கிறது. அரசின் இந்நட​வடிக்கை போக்கு​வரத்​துக்கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு மனநிறைவை அளிக்க​வில்லை.

ஆறாவது ஊதியக்​குழு பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் 246 சதவீத அகவிலைப்படி உயர்வு பெற வேண்டிய ஓய்வூ​தி​யர்​களுக்கு இப்போது 146 சதவீத அளவுக்​கும், ஏழாம் ஊதியக்​குழு பரிந்​துரைப்படி 53 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்​கப்பட வேண்டிய ஓய்வூ​தி​யர்​களுக்கு இப்போது 14 சதவீத அளவுக்​கும் மட்டும்​தான் அகவிலைப்படி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதாவது அதிகபட்​சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்​கப்பட வேண்டிய ஓய்வூ​தி​யர்​களுக்கு ரூ.4,000 மட்டுமே வழங்​கப்​பட்​டுள்​ளது. அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்​வுக்கான நிலுவைத் தொகையை வழங்​குவது குறித்து அரசுத் தரப்​பில் எதுவும் தெரிவிக்​கப்​பட​ வில்லை. 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி​நிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்​யப்​பட​வுள்ள நிலை​யில், போக்கு​வரத்​துக்கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு முழு அளவு அகவிலைப்படி உயர்வு வழங்​கு​வதற்கு அதில் நிதி ஒதுக்​கீடு செய்​யப்பட வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்றம் ஆணையிட்​டிருக்​கிறது.

ஆனாலும், உச்ச நீதி​மன்​றத்​தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்​வதன் மூலம் இந்த சிக்கலை இன்னும் சில மாதங்​களுக்கு தள்ளிவைக்​கலாம் என்று திமுக அரசு கருதுகிறது.ஓய்வூ​தி​யர்களை ஏமாற்றும் செயல்​களில் ஈடுபட்​டால் ஒரு லட்​சம் ஓய்​வூ​தி​யர் குடும்​பங்​களின் சாபம் ​திமுக அரசை வீழ்த்​தும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்ளார்​.

x