ராமேசுவரம்: பிரப்பன்வலசை கடற்கரையில் தீயணைப்பு வீரர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி!


பிரப்பன்வலசை கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக கடல் பகுதி மீட்புப் பணிகளுக்கு கடல் பகுதி தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டது.

தீயணைப்புப் படை வீரர்களுக்கு கடல் பகுதி நீச்சல், பல்வேறு தொழில் நுட்பங்கள், நவீன சாதனங்களை இயக்குவது மற்றும் வேகம் ஆகியவற்றை அதிகரிக்க காவல் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் சென்னை மெரினா, கோவளம், முட்டுக் காடு ஆகிய பகுதிகளில் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீயணைப்புப் படை வீரர்களுக்கு தொடர்ந்து கடல் பகுதி தொழில்நுட்பப் பயிற்சி வழங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி மற்றும் பிரப்பன்வலசை கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், அதனடிப்படையில் ராமேசுவரம் அருகே பிரப்பன்வசை கடற்கரை பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு கடல் பகுதி தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் இடையே கடல் பற்றிய அறிவு, நீச்சல் பயிற்சி, முதலுதவி, மீட்புப் பணியில் நவீன சாதனங்களை இயக்குவது, பேரிடர் காலங்களின் போது எவ்வாறு விரைந்து செயல்படுவது, துடுப்பு படகை இயக்குதல், ஸ்கூபா டிரைவிங் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது. பயிற்சியாளர் ஜெஹான் அவரது குழுவினர் தீயணைப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

x