சீமானுக்கெல்லாம் நான் பதில் சொல்றதே இல்லை: உதயநிதி ஸ்டாலின் அதிரடி!


சென்னை: பெரியார் குறித்து சீமான் பேசியது தொடர்பாக பேசிய உதயநிதி “அவருக்கு நான் பதில் சொல்றதே இல்லை” என்று தெரிவித்துள்ளார்

நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்மைக்காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சீமானின் இந்த பேச்சுகளுக்கு திராவிட இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீமானுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான், மீண்டும் மீண்டும் பெரியாரை சீண்டும் வகையில் பேசினார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

மேலும், இது பெரியார் மண் அல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான் என்று சீமான் பேசியது தொடர்பாக ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, “அவருக்கு நான் பதில் சொல்றதே இல்லை” என்று உடனடியாக சென்றார் உதயநிதி.

x