தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடு உயர்வு - சவரனுக்கு ரூ.840 எகிறியது!


சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து 7,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7,705 ரூபாயாகவும், சவரனுக்கு 60 ஆயிரத்து 640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 105 ரூபாய் உயர்ந்து 7,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 840 ரூபாய் உயர்ந்து 62 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x