சென்னை: மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது.
ராமநாதபுரதம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 32 நாட்களில் 7 முறைதான் கடலுக்குள் மீன் பிடிக்கசென்றுள்ளனர். அதற்குள் 52 மீனவர்கள் கைது செய்யப்
பட்டுள்ளனர். மத்திய, மாநிலஅரசுகள் இலங்கை அரசுடன் பேசி சுமூக தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.