சென்னை: வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம் என அண்ணா நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ அண்ணா வழியில் அயராது உழைப்போம். தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!’ எனத் தெரிவித்துள்ளார்