அண்ணா நினைவு தினம்: பிப்.3ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி!


சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி சென்னை வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை அடையும் என திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக் காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர், "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளினையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி .ஆர். பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்” என்று திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x