மதுரை: திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி பிப்.2-ம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று மலை பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் அருள்பாலிக்கும் சைவ மலையின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும். முருகப் பெருமானை அவமதிக்கும் வகையிலும், இந்து சமூக மக்கள் மனதைப் புண்படுத்தும் வகையிலும், வேண்டுமென்றே திட்டமிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடுவதற்கும், மலைக்கு அசைவ உணவு கொண்டுசெல்லும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அரசிடம் ஒப்படைக்கப்படும்... இதற்குத் தடை விதிக்கவும், திருப்பரங்குன்றம் மலையை அபகரித்து, கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதைத் தடுக்கக் கோரியும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் கெடுப்பவர்கள் மீது மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிப். 2-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களிடமும், வணிகர்களிடமும், கோயிலுக்கு வரும் பக்தர்
களிடமும் பெறப்பட்ட கையெழுத்துகள், பின்னர் அரசிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.