27 ஆண்டுக்கு பின் டிஎஸ்பிக்களான 83 காவல் ஆய்வாளர்கள் - மதுரையில் 4 பேருக்கு பதவி உயர்வு


மதுரை: தமிழக காவல்துறையில் 27 ஆண்டுக்கு பிறகு 83 ஆய்வாளர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மதுரையிலும் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 1997-ல் எஸ்ஐக்களாக பணி அமர்த்தப்பட்ட 83 பேருக்கு ஆய்வாளர் பணியில் இருந்து டிஎஸ்பியாக பதவி உயர்வு அளித்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இப்பட்டியலில் மதுரை நகர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பெத்ராஜ், கரிமேடு ஆய்வாளர் சங்கர், செல்லூர் ஆய்வாளர் சிவக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆய்வாளர் கனராஜ் மற்றும் திண்டுக்கல் உளவுத்துறை ஆய்வாளர் ஜோதிபாபு, திண்டுக்கல் சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆய்வாளர் சார்லஸ், விருதுநகர் காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் புகழேந்தி, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் செல்வத்துரை, சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஆய்வாளர் கண்ணதாசன், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பதிவேடு ஆய்வாளர் சண்முகம், ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோரும் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடங்களும் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

x