காரைக்குடி: வேங்கைவயல் பிரச்சினையில் திருமாவளவனிடம் ஏதேனும் தகவல் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வேறு அமைப்புகள் மூலம் விசாரணை கேட்கலாம்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ”வேங்கைவயல் பிரச்சினையில் திருமாவளவனிடம் ஏதேனும் தகவல் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வேறு அமைப்புகள் மூலம் விசாரணை கேட்கலாம். தமிழகத்தில் முதல்வராக வர சாதி பாகுபாடு கிடையாது. எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கட்சிக்கு தலைவராகி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வராகி விடலாம்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் வீழ்ச்சிக்கு பல காரணம் உள்ளன. அதில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தாததே முக்கிய காரணம். பணிபுரியும் ஊழியர் மிகவும் திறமையானவர்கள். அரசு பின்புலமாக இருந்தால் தான் வளர்ச்சி அடையும். சீமான் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேசுவதில்லை. சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசுவதை நான் கவனிப்பது இல்லை” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.