பழநியில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!


பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை நாளை (ஜன.30) பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதால், பக்தர்கள் படிப் பாதையை பயன்படுத்திக் கொள்ள தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார், மின் இழுவை ரயில் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப் காரில் 3 நிமிடங்களில் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிக அளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

அப்போது ரோப் காரை இயக்கும் மோட்டார், பற் சக்கரங்கள், ஷாப்டுகள் என அனைத்து பாகங்களும் சோதனை செய்யப்படும். அதன்படி, நாளை( ஜன.30) பராமரிப்புப் பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதால் பக்தர்கள் வின்ச் ரயில், படிப் பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x