பட்டியல் சமூகத்தில் இருந்து ஒருவர் முதல்வராக வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!


சிதம்பரம்: பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்று ஆளுநர் என்ஆர் ரவி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், "கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்திற்கு மாற்ற முனைந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம் அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது என்று அதையும் நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் வந்த பிறகு பட்டியல் சமூகத்து மக்களை, எப்படி ஆண்டார்கள் என்பது புரிந்து கொள்ள வேண்டும. பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதில் இருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன் மூலம் சீர்குலைக்க தங்களது பணியை துவக்கினார்கள்.

அவர்கள் தெளிவான பணிகளை முன்னெடுத்து துவக்கினார்கள் எத்தனை கல்விக் கூடங்கள் இருக்கிறது அதில் எந்தெந்த சமூகத்தினர் படிக்கிறார்கள் என்று கணக்கெடுத்தார்கள். மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன்பு அழகான மரமாக இருந்தோம், நீங்கள் வந்த பிறகுதான் கிளைகளை அழித்து விட்டீர்கள் என்று கூறினார்கள். கீழ்வெண்மணியில் தலித் சமூகத்தினர் கொல்லப்பட்ட கிராமத்திற்கு சென்றிருந்தோம் அங்கே ஒருவருக்கு கூட சரியான வீடு இல்லை அதனால் பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

இங்குள்ள மக்கள் அடித்தட்டு மக்கள் வறுமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் கிராம அளவில் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு நந்தனார் கல்வி கழகத்தை துவங்கி இந்த சமூகத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்வி மூலம் சமுதாயத்தை சீரமைக்க முன்னெடுத்தார்கள் சுவாமி சகஜானந்தா. பட்டியல் சமூகத்தில் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும். பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வர வேண்டும். சுவாமி சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்என் ரவி கூறினார்.

x