ஜன.29ல் திமுக எம்.பி-க்கள் கூட்டம்: மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசிக்க முடிவு!


சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விவாதிக்க திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜனவரி 29ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2025 - 26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை என்ற பெயரில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x