“திமுக ஆட்சியில் மக்கள் குரல் நசுக்கப்படுகிறது” - அர்ஜுன் சம்பத்


திண்டுக்கல்: திமுக ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்படாமல் மக்கள் குரல் நசுக்கப்படுகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தடை. ஆனால் கோவை பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை பாதுகாப்பு. இறுதி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என பாஜக, இந்து கட்சியினர் போராட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர்.

திமுக ஆட்சியில் மக்கள் குரல் நசுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அனுமதி மறுப்பது. நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என நினைத்துக் கொண்டு இருந்தேன் ஆனால், அவர் ஜோசப் கருணாநிதி ஸ்டாலின். சீமான் புகைப்படத்தை விளக்குமாறு கொண்டு அடிக்கின்றனர். மற்ற கட்சியினை இதுபோல் அனுமதிப்பார்களா.

கேரளாவில் தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது மும்மொழி அங்கு படித்து வருகின்றனர். அங்கு ஹிந்தி படித்ததாலும் மலையாளம் அழியவில்லை. கர்நாடகாவில் மும்மொழி திட்டம் தான் அங்கும் கன்னடம் அழியவில்லை,'' என்றார்.

x