உருட்டுக்கட்டைகளுடன் நின்ற விவகாரம் - சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவு!


சென்னை: சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற போது தங்களை தாக்க உருட்டுக்கட்டைகளுடன் 150 பேர் நின்றிருந்தாக பெரியாரிய அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழகத்தில் பெரியார் உணர்வாளர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே நேற்று முன் தினம் தந்தை பெரி​யார் திரா​விடர் கழகம், மே 17 இயக்​கம், திரா​விடர் விடு​தலைக் கழகம் உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட பெரி​யாரிய உணர்​வாளர்கள் கூட்​டமைப்பு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

மறுபுறம், நாம் தமிழர் கட்சி சார்​பில் பாது​காப்​புக்காக அவரது கட்சி​யினர் சீமான் வீட்​டில் முன்​தினம் இரவு முதலே குவிந்து பாது​காப்பு கொடுத்​துள்ளனர். அவர்​களுக்கு சிக்கன் பிரி​யாணி விருந்து வழங்​கப்​பட்​டுள்​ளது. பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது, சீமான் வீட்டில் நாதக தொண்டர்கள் 150 பேர் உருட்டுக்கட்டைகளுடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அவர்கள் எங்களை தாக்கும் நோக்கில் தான் உருட்டுக்கட்டைகளுடன் இருந்தனர் என பெரியாரிய அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. அதன் பேரில் சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

x