தங்கம் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7,525 ரூபாயாகவும், சவரனுக்கு 60 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 7,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 240 ரூபாய் உயர்ந்து 60 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.