தமிழ் படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது என சொன்னவர் பெரியார்: ஹெச்.ராஜா தாக்கு


மதுரை: தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள், தமிழை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசியவர் பெரியார்என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "காரைக்குடியில் தமிழக முதல்வர் பேசும்போது நிலை தடுமாறி பேசி உள்ளார். "வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.

களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிடர்களின் உரிமை. வள்ளுவர் யார் ? வள்ளலார் யார் ? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். திருக்குறள் கட்டமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில். அதன் அடிப்படையில் தான் திருக்குறளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவரை விட சனாதனி உண்டா ? பல இடங்களில் இந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். அந்தக் குறளை தங்கத் தட்டில் இருக்கும் மலம் என பெரியார் பேசினார்.

வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா ? வள்ளலாரை விட மிகச் சிறந்த இந்து உண்டா ? உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை பற்றி இழிவாக அழிப்பேன் என்று பேசினார். அதற்கு அவர் மீது பல வழக்குகள் உள்ளது. சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று நீதிமன்றமே சொல்லியுள்ளது. எனவே முதல்வர் சரியாக பேச வேண்டும். நான் முன்னேற்றத்துக்கு எதிரானவன் அல்ல என்று விஜய் பேசுகிறார்.

விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார். விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தம் வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையம் அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சினைகள் புரிவதில்லை. தற்போது சீமான் தொடர்ச்சியாக பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். ஆனால், சந்தேகம் இல்லாமல் ஈவெரா பத்தி முதலில் பேசியது ஹெச்.ராஜாதான், பாஜக தான்.

ஈவெரா தேச துரோகி. அவர் 1947 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியவர். ஈவெரா தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவெரா-வை தொட மாட்டான். தமிழ் காட்டு மிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள், தமிழை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசியவர் ஈவெரா. அவர் தலித் விரோதி, பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா" என்று ஹெச்.ராஜா கூறினார்.

x