காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆண், பெண் சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி மகளிர் திட்ட அலுவலர் சரவண பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் திட்ட கள பயிற்றுனர் குணா உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் பலர் பங்கேற்று ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.