தேனி: அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தேனி பங்களாமேட்டில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஓய்வு பெற்றோர் நலக்குழு அமைப்பாளர் பாலச்சந்தர் தலைமை வகிக்க, சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க திண்டுக்கல் பொதுச்செயலாளர் என்.ராமநாதன் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர்கள் ஜி.மணிகண்டன், ஜி.கணேஷ்ராம், மத்திய சங்க நிர்வாகிகள் எஸ்.முருகன், எஸ்.முத்துக்குமரன், உதயசூரியன், பாக்கியசெல்வன், சதீஸ்குமார், கணேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
போராட்டத்தில், மறைமுக தனியார்மயம், ஒப்பந்த முறை நியமனத்தை கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களைப் நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஓய்வு பெற்ற கிளை மேலாளர்கள் மணி, ரெங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது செய்யப்பட்டனர்.