கோவையில் பைக்கில் சென்றபோது துரத்திச் சென்று தாக்கிய ஒன்றை யானை - இளைஞருக்கு தீவிர சிகிச்சை!


கோவை: கோவை காரமடை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு யானை தாக்கியதில் பாதிக்கப்பட்ட நபருக்கு கோவை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட தோண்டை செட்டில்மென்ட் அருகில் நேற்று இரவு 9.45 மணி அளவில் யானை தாக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து ‘ஐசியு’ வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விசாரணையில், அவரின் பெயர் ஜான் (எ) சதிஷ்குமார் (23) என்பதும், இரு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒற்றை ஆண் யானை அவர்களை துரத்தியுள்ளது. இருவரும் வாகனத்தை விட்டு தப்பியோடிய நிலையில், ஜான் என்ற சதிஷ்குமார் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது யானை அவரின் வயிற்று பகுதியில் மிதித்துள்ளது.

x