கோமியம் மனிதர்கள் பயன்படுத்த உகந்தது என சான்றிதழ் பெறுவார்களா? - செல்வப்பெருந்தகை கேள்வி


சென்னை: ஐஐடி இயக்குநர் காமகோடியும், கோமியம் அமிர்த நீர் என்று கூறிய பாஜக தலைவர்களும் சிறுநீர், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உகந்தது என்று, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெறுவார்களா? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”உலகம் முழுவதிலும் தொடர்ந்து விவாத பொருளாக மாறி வருகிற பசு மாட்டின் கழிவுகளான சிறுநீர், சாணம், மனிதர்கள் பயன்படுத்துவற்கு உகந்ததா ?

கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து - (நாலடியார்: 135)

விளக்கம்: சங்க இலக்கியங்களில் ஒன்றான நாலடியாரில் கல்வி கரையில்லாதது மற்றும் எல்லையற்றது. கல்வியைக் கற்பது என்பது அன்னப் பறவை நீரிலிருந்து பாலை பிரிப்பது போல கற்றவர்கள் பயனற்ற வற்றிலிருந்து பிரித்து, உண்மையை படிக்க வேண்டும் என்ற நாலடியாரின் கூற்றிக்கேற்ப கோமூத்திரம் (கோமியம்) மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று கூறிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியும், கோமூத்திரம் (கோமியம்)- அமிர்த நீர் என்று கூறிய பாஜக தலைவர்களும் சிறுநீர், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உகந்தது என்று,

1. UKMHRA - UNITED KINGDOM THE MEDICINES AND HEALTHCARE PRODUCTS REGULATORY AGENCY,

2. USFDA - UNITED STATES FOOD AND DRUG ADMINISTRATION,

3. DCGI- DRUGS CONTROLLER GENERAL OF INDIA

இந்த அமைப்புகளிலிருந்து சான்றிதழ் பெறுவார்களா? என்று உலக மக்கள் அறிய விரும்புகிறார்கள்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

x