சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினை வகைகளை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஜன.28 முதல் ஜன.31-ம் தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் ராகி, கம்பு, வரகு, சத்துமாவு, பழரொட்டி, ராகி தினை, சாக்லெட், பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி, சோளம், தினை, வெல்லம், வாழைப்பழம், வால்நட், சாக்லேட், வெண்ணெய் வகை கேக்குகள், கோதுமை பீட்சா உள்ளிட்டவற்றை தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் புத்தாக்க நிறுவனத்தை நேரிலோ 8668102600/ 7010143022 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் பயனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியும் உள்ளது. கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.