சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும் போது பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர், தமிழ்நாட்டை பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. தேர்தல் அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் சாதிய சண்டைகள் நடப்பது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.