சிட்லபாக்கம்: சிட்லபாக்கம் பகுதியில் 20 வீடுகளில் ஏசி பெட்டியில் இருந்து செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் மூன்றாவது பிரதான சாலை குரு அபார்ட்மெண்ட் மற்றும் எட்டாவது குறுக்குத் தெரு சபரி அபார்ட்மெண்ட், மேலும் முத்து லஷ்மி நகரிலும் ஏசி காப்பர் பொருள்கள் 2025ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி அன்றில் இருந்து அடுத்தடுத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்ததுள்ளது. இதேபோல் சுமார் 20 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் குறிப்பாக காலை 3 மணி முதல் 4 மணிக்குள் திருடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் உள்ள முட்டு சந்துகளில் அமைந்துள்ள வீடுகளில் இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், வீடுகளில் ஆட்கள் இருந்தபோதே ஏசி செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏசி பெட்டியில் செம்பு கம்பிகள் திருடப்பட்டது குறித்த புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீஸார்ர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு சிட்லபாக்கம் பகுதியில் ஏசியின் அவுட்டோர் யூனிட் திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குளிர் காலம் என்பதால் பலர் ஏசியை பயன்படுத்துவதில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள் வீடுகளில் உள்ள வெளிப்புறத்தில் இருக்கும் அவுட்டோர் யூனிட்டில் இருந்து காப்பர் கம்பியை குறிவைத்து திருடி உள்ளனர். தற்போது 20 வீடுகளுக்கு புகார் தரப்பட்டுள்ளது என்பதால் விவரம் தெரியவந்துள்ளது. இன்னும் பலர் கோடை காலம் நெருங்கும் போது மட்டும் தான் ஏசியை பயன்படுத்துவார்கள் அப்போது தான் பலருக்கு தெரிய வரும். இந்த சம்பவம் சிட்லபாக்கம் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.