விருதுநகரில் உணவு திருவிழா மேலும் ஒரு நாள் நீட்டிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!


விருதுநகர்: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் வரவேற்பு மற்றும் கோரிக்கையை ஏற்று விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 உணவுத் திருவிழா மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, இன்று மாலையும் நடைபெறுகிறது.

விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில், விருந்துடன் விருதுநகர் கார்னிவல்-2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, விருதுநகரில் விருந்துடன் விருதுநகர் கார்னிவல்-2025 என்ற தலைப்பில் உணவு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உணவுத் திருவிழாவில் சுமார் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவுத் திருவிழாவிற்கு அனைவருக்கும் அனுமதி இலவசம்.

மேலும், உள்ளுர் மற்றும் சர்வதேச உணவுகள், பொழுது போக்கு அம்சமாக பல்வேறு ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. உணவுத் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் பிடித்தமான உணவுகளை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் பெருவாரியான வரவேற்பு மற்றும் கோரிக்கையை ஏற்று விருந்துடன் விருதுநகர் உணவுத் திருவிழா மேலும் ஒரு நாள் (19ம் தேதி) இன்று நீட்டிக்கப்படுள்ளது.

x