பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் அறிவிப்பு


சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 85 சதவீதம் பேருக்கு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 34,793 நியாய விலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ரொக்கப் பரிசு வழப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பச்சரிசி, ஜீனி, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த சூழலில், ஜனவரி 18-ம் தேதி வரை 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம்- தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

x