தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?


சென்னை: இன்று டெல்டா உட்பட 9 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (18-01-2025) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (19-01-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

x