சென்னை: நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதற்காக, அந்த ஹாலிவுட் படக்குழு காப்புரிமை கேட்டு மெயில் அனுப்பியதால் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அஜித்தின் லுக், விறுவிறுப்பான காட்சிகள், அஜித் - த்ரிஷா காதல் காட்சிகள், அர்ஜுனின் என்ட்ரி, பின்னணி இசை என 2.22 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், இப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Persistence is the path, Victory is the destination.