கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!


சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 2007ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில்,தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப் படுகிறது.

2005ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 2025ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அன்று திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ரூ.2,00,000/- கழகத் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

அதன்படி, நிதி உதவி பெறுவோர் விவரம்:
1. பழனிவேல், தாழம்பட்டு, மாளிகம்பட்டு அஞ்சல், பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.- 25,000/-
2. மாதவரம் எம்.பி.நடராசன், பொன்னியம்மன்மேடு, சென்னை. - 25,000/-
3. ஆர். அண்ணாமலை, திரியாலம் - அஞ்சல், திருப்பத்தூர் மாவட்டம். - 25,000/-
4. செல்லப்பன், அருகாவூர் அஞ்சல், பெரும்பள்ளம், திருவண்ணாமலை மாவட்டம்- 25,000/-
5. எஸ்.இராமதாஸ், நெடிமோழியனூர், மயிலம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்- 25,000/-
6. இருசன், காட்டுக்கொட்டகை, எடுத்தவாய்நத்தம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி- 25,000/-
7. என்.அகமது கபீர், புதுவலசை, மண்டபம், இராமநாதபுரம் மாவட்டம். - 25,000/-
8. எம்.பொன்னுச்சாமி, வார்டு-19, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம். - 25,000/-’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x