நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சுந்தரம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 73. இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத் தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளராக வலம் வந்த பி.ஆர்.சுந்தரம் அதன் பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாராக பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.