சென்னை சங்கமம் கிராமிய கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்கும் கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து,

இந்தாண்டுக்கான ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியை கடந்த ஜன.13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள 18 இடங்களில் 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது . இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு்ள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x