ஜெர்மனியில் கண்காட்சி: ரூ.3,000 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி வாய்ப்பு


கரூர்: ஜெர்மனி நாட்​டின் பிராங்​பர்ட் நகரில் உலகின் மிகப்​பெரிய ஜவுளிக் கண்காட்சி நேற்று முன்​தினம் தொடங்​கியது. இதில், இந்திய நிறு​வனங்கள் பங்கேற்ற கூடத்தை மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தொடங்கி​வைத்​தார்.

இந்தக் கண்காட்​சி​யில் 60 நாடு​களில் இருந்து 2,900 ஜவுளி உற்பத்தி நிறு​வனங்கள் மற்றும் மொத்த விற்​பனை​யாளர்கள் பங்கேற்று, தங்களது பொருட்களை காட்​சிப்​படுத்​தி​யுள்​ளனர். இந்தியா​வில் பானிபட்​டில் இருந்து 158, கரூரில் இருந்து 67 உட்பட 330 ஜவுளி உற்பத்தி நிறு​வனங்கள் தங்களது பொருட்​களைக் காட்​சிப்​படுத்​தி​யுள்ளன.

இந்திய ஜவுளித் துறை, ஏற்றுமதி வளர்ச்​சிக் கழகம் ஆகியவை, இந்தக் கண்காட்​சி​யில் பங்குபெற இந்திய ஜவுளி உற்பத்​தி​யாளர்​களுக்கு உதவிபுரி​கின்றன. கரூர் ஜவுளி ஏற்றுமதி நிறு​வனங்கள் ஆண்டுக்கு ரூ.6,500 கோடிக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்தக் கண்காட்சி மூலம் ரூ.3,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆணைகள் கிடைக்​கும் என்று எதிர்​பார்ப்​பதாக கரூர் ஜவுளி உற்பத்​தி​யாளர்கள் மற்றும் ஏற்றும​தி​யாளர்கள் சங்கத் தலைவரும், இந்திய ஏற்றும​திகள் நிறு​வனக் கூட்​டமைப்​பின் மண்​டலத் தலை​வருமான பி.கோபால​கிருஷ்ணன் தெரி​வித்​துள்​ளார்.

x