பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன்: ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு


சென்னை: சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். அப்போது, “சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். பெரியாரை பற்றி பேசினாலே அவர்கள் மீது பலர் ஒன்று சேர்ந்து பாயும் பழக்கம் கடந்த 50 ஆண்டுகளாக இருக்கிறது. அதனை பத்திரிகை துறையில் உடைத்தவர் சோ, தற்போது சீமான் அரசியலில் உடைத்து கொண்டு இருக்கிறார்.

இது தமிழ்நாட்டிற்கு தற்போது நல்லது. தற்போது திராவிட மாடல் உடைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் சமூக வலை தளங்களில் சரியான முறையில் பரப்ப வேண்டும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சி தான். திமுகவும் அதிமுகவும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை.

ஆனால் அதிமுக தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது. அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

x