சென்னை: ஒட்டுமொத்த சொத்தின் பெரும்பகுதியை செலவழித்து வறண்டு கிடந்த பூமியை வளம்பெறச் செய்ததில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் அரும்பணியையும், பெருந்தன்மையையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் பாசன வசதியை பூர்த்தி செய்துவரும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தனது ஒட்டுமொத்த சொத்தின் பெரும்பகுதியை செலவழித்து வறண்டு கிடந்த பூமியை வளம்பெறச் செய்ததில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் அரும்பணியையும், பெருந்தன்மையையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்த்தேவை மற்றும் பாசன வசதியை பூர்த்தி செய்துவரும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் இன்று…
தனது ஒட்டுமொத்த சொத்தின் பெரும்பகுதியை செலவழித்து வறண்டு கிடந்த… pic.twitter.com/00G7qI8JLi— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 15, 2025