சீமானுக்கு மனநல மருத்துவம் தேவைப்படுகிறது - தமிழக வாழ்வுரிமைக் கட்சி


சீமானுக்கு மனநல மருத்துவம் தேவைப்படுகிறது என பெரியார் குறித்த சீமானின் பேச்சுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்களவர்களின் வன்கொடுமைகளை நேரில் எதிர்கொண்ட எந்த ஈழத் தமிழர் தலைவரும் 'சிங்களப் பெண்களை கற்பழிப்பேன்' என்று பேசவில்லை. ஆனால் சீமான் பேசினார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஆண்டுக்கணக்காகப் போராடிய நாங்களும், மற்றவர்களும் அணு உலைகள் பற்றி ஆயிரம் விடயங்கள் பேசினோம். ஆனால் சீமான் மட்டும்தான் 'ஆணுறை தயாரிக்கத் தெரியாத நாட்டுக்கு அணு உலை எதற்கு?” என்று “அந்த கோணத்திலிருந்து" கேள்வி எழுப்பினார்.

பெரியார் சொன்ன பல்வேறு கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, உடலுறவு பற்றி உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார் சீமான். பெண்களை வெறுக்கும், பெண்களைக் கண்டு அஞ்சும், பெண் விடுதலையை எதிர்க்கும் காவி கோஷ்டிகள் சீமானுடன் சேர்ந்து பஜனை பாடுகிறார்கள். சீமானுக்கு மனநல மருத்துவம் அவசரமாகத் தேவைப்படுகிறது.

தொன்மையும், பெருமையும், தொலையாச் சிறப்புகளும் கொண்டிருக்கும் தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் சீமான். இவரை தமிழ்த் தேசியத்தின் முகமாகக் கொண்டு, இவருக்கு வக்காலத்து வாங்கும் அன்பும், பண்பும் கொண்ட தோழர்கள் சற்று சிந்தியுங்கள்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

x