அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 41 பேருக்கு காயம்!


இன்று காலை 6.30 மணிக்கு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது
வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது வரையில் 8 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்தப்படியாக திவாகர் என்பவர் 7 காளைகளை அடக்கி 2ம் இடத்திலும், ராகவா என்பவர் 3 காளைகளை அடக்கி 3ம் இடத்திலும் உள்ளனர்.

தற்போது வரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உட்பட 41 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x