சென்னை: ஜன.14, 15, 16 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகை (ஜன.14), மாட்டுப் பொங்கல் (ஜன.15), காணும் பொங்கல் (ஜன.16) ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
இந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை 10 நிமிட இடைவெளியிலும், நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஜன.17-ம் தேதி (வெள்ளி) சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணிமுதல் 8 மணிவரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவை அடிப்படையில் கூடுதல் ரயில் சேவை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.