சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு


கிருஷ்ணகிரி: சமூகநீதியைப் பற்றி பேசுகிற தமிழ்நாட்டில்தான் தினமும் தலித்துகள் மீதான வன்முறைகளும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஓசூரில் வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவி, “கடந்த 60 ஆண்டுகளாக சமூகநீதியைப் பற்றி பேசுகிற தமிழ்நாட்டில்தான் தினமும் தலித்துகள் மீதான வன்முறைகளும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் எனக்கு வலியை ஏற்படுத்துகின்றன.

சமூக நீதியைப் பாதுகாக்க வள்ளலார் வழியைத்தான் பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் வள்ளலாரை ஏற்று, அனைவரையும் சமமாக பார்த்தால்தான் சமூகநீதி சரியாக இருக்கும். நாடு முழுவதும் வள்ளலாரை கொண்டு செல்வதுடன், பள்ளி பாட புத்தகங்களிலும் வள்ளலார் குறித்த குறிப்புகளை சேர்க்க வேண்டும்’ என்று பேசினார்.

x