மதுரையில் பொங்கல் பண்டிகை கோலாகலம்: பூக்களின் விலை கணிசமாக உயர்வு!


மதுரை: பொங்கல் பண்டிகையால் பூக்கள் வாங்க பொதுமக்கள் நேற்று முதலே ஆர்வமடைந்துள்ளனர். ஆனால், வரத்து அதிகமாக உள்ளதால் கடந்த ஆண்டில் இதே நாளில் ரூ.4 ஆயிரத்திற்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ரூ.2 ஆயிரத்திற்கு விற்றது.

மதுரை மல்லி ஓரளவிற்கு வரத்து அதிகமாக உள்ளதால் கடந்த காலத்தை போல் மிகப்பெரியளவில் விலை உயரவில்லை. கிலோ ரூ.2,000க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பொங்கல் பண்டிகை நாளில் இந்நேரம் மல்லிகை கிலோ ரூ.4 ஆயிரத்தை தொட்டிருந்தது. வரத்து குறைவாக உள்ள முல்லை, பிச்சி ஆகிய பூக்களின் விலை கணிசமான விலையேற்றம் கண்டுள்ளது.

பூக்கள் விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.2,000, மெட்ராஸ் மல்லி ரூ.1,800, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.500, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.400, தாமரை (ஒன்றுக்கு) ரூ.35 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.

x