சென்னை: சீமான் பெரியார் குறித்து அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். தற்போது பெரியாரின் பூமியான ஈரோட்டில் சீமான் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘எம்ஜிஆர் கட்சியை ஆரம்பிக்கும்போது பெரியார், அண்ணா ஆகியோரை குருவாக கருதி தொடங்கினார். அப்படி என்றால் பெரியாரை அவதிக்கும் சீமானை ஏன் அதிமுக கண்டிக்கவில்லை. பெரியார் குறித்து அவதூறாக பேசும் போது அதிமுக ஏன் மௌனமாக இருக்கிறது ?
சீமான், தந்தை பெரியார் குறித்து அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். தற்போது பெரியாரின் பூமியான ஈரோட்டில் சீமான் எப்படி வாக்கு சேகரிக்க முடியும். இதற்கு மக்கள் பதில் அளிப்பார்கள்’ என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரை தவெக கட்சி தனது கொள்ளை தலைவராக ஏற்று உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவமதிக்கும் வகையில் பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. எனினும் சீமான் தனது நிலைபாட்டை மாற்றாமல், பெரியார் குறித்து தொடர்ந்து அவமதிப்பு செய்யும் வகையில் பேசி வருகிறார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.