சென்னை: தமிழ்நாடு அரசின் வன சட்ட திருத்தத்தால் விவசாயிகளுக்கு மேலும் கூடுதல் பாதிப்பையே தரும். எனவே இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில், ‘ஜனவரி 9ம் தேதி அன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சட்டத்தில் ... வேளாண் உற்பத்தியை; மனித உயிர்களை பறிக்க செய்யும் காட்டுப் பன்றிகளை தடுப்பதற்கான நிலையில் திருத்தங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகளும் அப்பாவி மக்களும் அடைந்து வருகிற இழப்பிற்கும்: துன்பத்திற்கும் இந்த திருத்தங்கள் பயனளிக்காது..
வன பாதுகாப்பு எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் பன்றிகள் பாதிப்பை ஏற்படுத்தினால் தடுக்க முடியாது என்றால்.. அங்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடு என்ன...? என்பதை அரசு சொல்ல வேண்டும். வனவிலங்குகளுக்கு வனம் தான் புகலிடம். வனத்தை வேறு வகை பயன்பாட்டிற்காக அழித்துவிட்டு சமவெளி பகுதிகளை கூடுதலாக சேர்த்து வன வளையத்திற்குள் கொண்டு வருவது என்ன நியாயம்.,?
வன எல்லைக்கப்பால் ..மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் வரும் காட்டு பன்றிகளை.. வனத்துறையிடம் முறையிட்டால் .. அவைகளை திரும்ப காடுகளில் விடுவார்கள் என்பதை தற்போதைய நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும். வனத்துறை ஊழியர்கள் இதற்கு ஏற்ப போதுமான அளவு இல்லாத நிலையில்.. ஆக்ரோஷமாக வரும் பன்றிகளை பிடித்து கொண்டு போய் காட்டில் விடுவது என்பது.. இதற்கான பயிற்சியும் போதுமான ஊழியர்களும் இல்லாத போது இது எப்படி சாத்தியம் ஆகும்.
அதுவரை பன்றிகளால் பாதிக்கப்படுகிற வேளாண் பயிர்களுக்கு ஈடு என்ன..? மேலும் மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் பன்றிகள் குறித்து கூறினால் வனத்துறை ஊழியர்களே அதை சுட்டுவிடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. காட்டுப் பன்றிகள் கர்ப்பமாக இருந்தாலோ... இளம் குட்டிகளாக இருந்தாலோ அவைகளை சுடக்கூடாது என முன்னரே வனச் சட்டத்தில் உள்ளது. இந்த நிலையில்... பகலில் பதுங்கு குழிகளிலும் புதர்களிலும் பதுங்கி உள்ள உள்ள பன்றிகளை எப்படி சோதித்து சுட முடியும்.
இந்த நெருக்கடியில் வனத்துறையினரால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க இயலாது. மேலும் இவைகளை நடைமுறைப் படுத்திட.. அரசு அமைக்கும் குழுவிடம் பாதிக்கப்படுவோர் முறையிட்ட பின் அவர்கள் கூடி ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின் தான் மேற்கண்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என திருத்தத்தில் உள்ளது. இந்த வனச் சட்ட திருத்தத்தில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் மற்றும் மலையடிவாரம் வாழ்வோர்களின் கால்நடைகள் மேய்ச்சல் என்பது பல காலங்களாக நடந்து வரும் வனச்சட்ட அனுமதி ஆகும். கால்நடைகளின் எச்சங்கள் காடுகளின் வளர்ப்புக்கும்.. வனப்பிற்கும் பயன்படக்கூடியது என்பதால் தான் கால்நடைகள் மேய்ச்சல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சட்டதிருத்தம் இதை தடுக்கிறது.
பாதிப்பிலிருந்து மீள விவசாயிகள் வழி கேட்டால்... இந்த திருத்தம் பாதுகாப்பு இருக்காது என்பது மட்டுமல்ல. மேலும் கூடுதல் பாதிப்பையே தரும். எனவே இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும் விவசாயிகள் சங்கங்களின் கருத்தறிந்து ..உகந்த சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசை....தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.