பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: சேலம் மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் விலகல்


கோப்புப் படம்

பெரியார் குறித்த சீமானின் சர்ச்சைப் பேச்சு பெரும் விவாதங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் கூட அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், சேலம் மாநகர மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார் விலகியுள்ளார். சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

x