1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: வி.சி.சந்திரகுமார் உறுதி


ஈரோடு கிழக்கு மாவட்ட இடைத்தேர்தலில் ஜனவரி 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த இடைத்தேர்தலில் எந்த அரசியல் கட்சிகள் பெறாத வகையில் வெற்றி இருக்கும். பல கட்சிகள் தனியாகவும், ஒட்டுமொத்தமாக நிறுத்தினாலும் திமுக வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி. திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் கதாநாயகனாக நான்கு ஆண்டு சாதனை திட்டங்கள் இருக்கும். மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பல நல்ல திட்டம் அறிவித்துள்ளார்.

விடியல் பயணம், மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டம் மக்களை சென்று சேர்ந்துள்ளது. பிரச்சார யூகங்கள் தான் மிகப்பெரிய வெற்றி பெற்று தரும். குறைந்தபட்சம் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021,2023ம் ஆண்டு தேர்தலில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவரும் பல வாக்குறுதி கொடுத்து உள்ளார்கள்.

அதில் விட்டு சென்ற வாக்குறுதியை மீதமுள்ள வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றப்படும். போக்குவரத்து நெரிசல் போன்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியோடு இணைந்து செய்வேன். ஆகையால் இதற்கு என்று தனியாக வாக்குறுதி என்று அவசியம் இல்லை. புறநகர் பேருந்து நிலையம் மற்றும் காய்கறிகள் சந்தை இடமாற்றம் போன்றவை நடைமுறைக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் குறையும்” என்று வி.சி.சந்திரகுமார் கூறினார்.

x