சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வின் வெற்றிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு போற்றுதலுக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடம் என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் திமுகவிற்கு, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
நிதி நெருக்கடிகள் மத்தியிலும் தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய மக்களுக்குப் பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சகோதரர் பெரும் வாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக வேட்பாளரின் வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளர் வெற்றிக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் களப்பணியாற்றுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்