சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளராக, திமுகவின் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுவார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தரப்பில் போட்டியிட விரும்பாததால் திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.