ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - திருமாவளவன் பேட்டி


மதுரை: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பாடுபடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பல்கலைக்கழக மானியக்குழு அண்மையில் வெளியிட்ட புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்றுள்ளது. உயர் கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது. துணை வேந்தர், பேராசிரியர்கள் நியமனத்திற்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை என்பது போன்று கொண்டு வந்துள்ளது.

இதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக புதிய விதிகளை திரும்ப பெறவேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

x