கதிர்​ ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத் துறை சோதனை


கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை

வேலூர்: வேலூர் மக்களவை உறுப்​பினர் கதிர்​ஆனந்​துக்கு சொந்​தமான கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் மீண்​டும் அமலாக்​கத்​துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்​றனர்.

வேலூர் மாவட்டம் காட்​பாடி காந்தி நகரில் நீர்​வளத்​துறை அமைச்சர் துரை​முருகன் வீடு மற்றும் இவரது மகனும் கதிர் ஆனந்தின் அறக்​கட்டளை சார்​பில் காட்​பாடி அடுத்த கிறிஸ்​டி​யான்​பேட்​டை​யில் நடத்​தப்​பட்டு வரும் கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்​சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட 4 இடங்​களில் அமலாக்​கத்​துறை அதிகாரிகள் சிஆர்​பிஎப் போலீஸ் பாது​காப்புடன் அண்மை​யில் சோதனை நடந்து முடிந்​தது.

பூஞ்​சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்​களில் நடைபெற்ற 8 மணி நேர சோதனை​யில் பூஞ்​சோலை சீனிவாசன் வீட்​டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்​கப்​ பணம் பறிமுதல் செய்​யப்​பட்​டதாக கூறப்​படு​கிறது. அதேபோல், அமைச்சர் துரை​முருகன் வீட்​டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ரூ.8 லட்சம் பணம் அவர்கள் வசமே ஒப்படைக்​கப்​பட்​டது.

இதற்​கிடை​யில், கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் 44 மணி நேரம் நடந்த சோதனை​யில் பறிமுதல் செய்​யப்​பட்ட பணம் அமலாக்கத் துறை​யின் கணக்​கில் டெபாசிட் செய்​யப்​பட்​டதாக கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், அமலாக்​கத்​துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு​வினர் நேற்று மீண்​டும் கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் சோதனை நடத்த தொடங்​கினர். இது தொடர்பாக விசா​ரித்த​போது, “கல்​லூரி​யின் நிர்வாக அலுவலக கட்டிடத்​தில் இருந்த 2 அறைகளுக்கு ஏற்கெனவே அமலாக்​கத்​துறை அதிகாரிகள் சீல் வைத்​துச் சென்​றனர். அந்த அறை​களில் சோதனை நடத்து​வதற்​காகவே அமலாக்​கத்​துறை அதிகாரி​கள் வந்​ததாக தெரி​வித்​தனர்.

x