சென்னை: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து 2021ம் ஆண்டு நடைபெற்றது. 2019ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரையில், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்களை இந்த சிறப்பு அதிகாரிகள் கவனிப்பார்கள்.